/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிவாரணம் கேட்டு ஏனாதி மக்கள் மனு
/
நிவாரணம் கேட்டு ஏனாதி மக்கள் மனு
ADDED : ஜன 23, 2025 03:59 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகியதையடுத்து நிவாரணம் கேட்டு ஏனாதி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஏனாதி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக மானாவாரி நெல் விவசாயம் செய்தனர்.போதிய பருவமழை பெய்யாததால் பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தற்போது ஒரு சில கிராமங்களில் நெல் அறுவடை செய்து வரும் நிலையில் ஏனாதி கிராமத்தில் நெற்பயிர் போதிய வளர்ச்சியின்றி உள்ளது. இதனால் நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து ஏனாதி கிராம மக்கள் முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் ராஜ்குமாரிடம் நிவாரணம் வழங்க கோரி மனு அளித்தனர். கலெக்டருக்கு அனுப்பி பரிந்துரை செய்வதாக அவர் கூறினார்.

