/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தில்லையேந்தல் ஊராட்சி, கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செப்.17ல் நடக்கிறது

ADDED : செப் 13, 2025 03:47 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை சட்ட வழியில் அப்புறப்படுத்த வலியுறுத்தியும், புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை புதுப்பிக்க கோரியும், கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டை சீரமைக்க வலியுறுத்தியும் செப்.,17ல் கண்டன எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கீழக்கரை நகர் தலைவர் முகமது ஜலீல் மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகச் செயலாளர் முகைதீன் இப்ராஹிம் ஆகியோர் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு இடையூறு ஏற்படுத்தும் நோய் பரப்பும் தெரு நாய்களை சட்டப்படி அப்புறப்படுத்தவும், தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் பகுதியில் புதிய சாலை அமைத்து தரக் கோரியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியும் செய்யாத கீழக்கரை நகராட்சி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து செப்., 17 மாலை 4:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் என்றனர்.