/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலைபேசியை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பரிசு
/
அலைபேசியை ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பரிசு
ADDED : ஜன 14, 2025 08:01 PM

ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் காரில் இருந்து விழுந்த விலை உயர்ந்த அலைபேசியை எஸ்.பி., சந்தீஷிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பாராட்டிபரிசு வழங்கினார்.
ராமநாதபுரம் ஜோதி நகரை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் விஜய்கண்ணன் 27. ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை ஆட்டோவில் கீழக்கரைக்கு சவாரி சென்று விட்டு திரும்பினார். திருப்புல்லாணி விலக்கில் முன்னால் சென்ற காரின் கதவு கண்ணாடி வழியாக அலைபேசி விழுவதை கண்டார்.
உடனடியாக விலை உயர்ந்த அலைபேசியை எடுத்து விஜய்கண்ணன் நேரடியாக எஸ்.பி., அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எஸ்.பி., சந்திஷிடம் நடந்ததை கூறி அலைபேசியை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவர் விஜய்கண்ணன் நேர்மையை பாராட்டிய எஸ்.பி., பரிசு வழங்கி பாராட்டினார்.