/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே ரூ.15 லட்சம் சீமைக்கருவேலம் எரிந்தது
/
கமுதி அருகே ரூ.15 லட்சம் சீமைக்கருவேலம் எரிந்தது
ADDED : ஜூலை 15, 2025 03:23 AM

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் கண்மாயில் தீ பரவியதால் ரூ.15 லட்சம் மதிப்பிலான சீமைக் கருவேலம் மரங்கள் தீயில் எரிந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
கோவிலாங்குளம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 308 ஏக்கர் பாசன வசதி கொண்ட கண்மாய் உள்ளது. தண்ணீர் வசதியின்றி வறண்ட நிலையில் சீமைக் கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளது. திடீரென்று கண்மாய் பகுதியில் தீ பரவியது.
இதில் ஏராளமான சீமைக் கருவேலம் மரங்கள் தீயில் எரியத் தொடங்கியது. மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். கிராம மக்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுப்பணிதுறைக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான சீமை கருவேலம் மரங்கள் தீயில் கருகின.
கண்மாயில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக கோவிலாங்குளம் போலீசில் கிராம மக்கள் புகார் அளித்தனர். இடத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் புகைமண்டலமாக மாறியது.