ADDED : பிப் 16, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலிநோக்கம்: -கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 9 கி.மீ.,ல் வாலிநோக்கம் உள்ளது. இங்கு உப்பளம் அருகே பயணிகள் நிழற்குடை இல்லாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
வாலிநோக்கம் போலீஸ் ஸ்டேஷன், மின்வாரியம்,உப்பளம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ள நிலையில் நாள்தோறும் ஏராளமான சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களும், பொதுமக்களும் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர்.
பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயிலிலும் மழையிலும் நிற்கின்றனர். எனவே அரசு உப்பளம் செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.