ADDED : மார் 08, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் நேற்று உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் நிறைவாக 'தமிழ்நாடு - 2030 கனவுகள் மெய்ப்படும்' என்ற நிகழ்ச்சியில் ஐந்தாண்டு சாதனைகள் குறித்து பேசியது, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
அப்போது ஐந்தாண்டு சாதனை மலர் வழங்கப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில்தம்பி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
