/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓடும் காரில் பாம்பு புகுந்ததா குடும்பத்தினர் 'திக் திக்' பயணம்
/
ஓடும் காரில் பாம்பு புகுந்ததா குடும்பத்தினர் 'திக் திக்' பயணம்
ஓடும் காரில் பாம்பு புகுந்ததா குடும்பத்தினர் 'திக் திக்' பயணம்
ஓடும் காரில் பாம்பு புகுந்ததா குடும்பத்தினர் 'திக் திக்' பயணம்
ADDED : டிச 21, 2025 03:24 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஓடும் காருக்குள் பாம்பு புகுந்ததாக கூறியதால் காரில் பயணம் செய்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் 'திக் திக்' பயணம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் குடும்பத்துடன் காரில் ராமநாதபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார். நேற்று காலை 11:00 மணிக்கு தொண்டி மணக்குடி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது 5 அடி நீளமுள்ள பாம்பு சாலையை கடந்து சென்றது. பாம்பு மீது மோதாமல் இருக்க கார்த்திகேயன் ஓரமாக சென்றார்.
அப்போது காரை கடந்து சென்ற லாரி டிரைவர் காரை நிறுத்தி காருக்குள் பாம்பு நுழைந்து விட்டதாக கார்த்திகேயனிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினர். பாம்பு காருக்குள் எங்கு உள்ளது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் முருகானந்தம் மற்றும் வீரர்கள் சென்று காருக்குள் பாம்பை தேடினர். நீண்ட நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. காருக்குள் பாம்பு இல்லை என்று உறுதிப்படுத்திய தீயணைப்பு வீரர்கள் காரை சர்வீஸ் செய்து பாருங்கள் என்று கூறினர்.
அதனை தொடர்ந்து மீண்டும் கார்த்திகேயன் குடும்பத்தினர் பயணத்தை தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் 'திக், திக்' என்று அச்சத்திலேயே சென்றனர்.

