/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம்
/
உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம்
ADDED : ஏப் 18, 2025 05:35 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் உங்களைத் தேடி உங்கள்ஊரில் சிறப்பு திட்ட முகாம் மாவட்ட வருவாய்அலுவலர் கோவிந்தராஜலு தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் ஐந்து பேருக்கு பட்டா மாறுதல், 10 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
முகாமில் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ண குமாரி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பத்மநாதன், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத், கலால் துறை தாசில்தார் சுவாமிநாதன், பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், லிங்கம் கலந்து கொண்டனர்.

