/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரியமான் கடற்கரையில் சூறைக்காற்று சவுக்கு மரம் முறிந்து வாகனங்கள் சேதம்

ADDED : மே 27, 2025 12:42 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே அரியமான் பீச் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் சவுக்கு மரம் முறிந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தது.
அரியமான் கடற்கரை சவுக்கு மரங்களுடன் கூடிய சமதள பகுதியாகும். ஆழம் குறைவான கடற்கரை கண்ணாடி போல் தரைப்பகுதி தெரிவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
நேற்று சவுக்கு தோப்பு பகுதியில் சுற்றுலா வந்த பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்றனர். அப்பகுதியில் மதியம் 12:15 மணிக்கு சூறைக்காற்று வீசியது. இதில் சவுக்கு மரம் முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார் மீது விழுந்தது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் தப்பினர்.