/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற மாணவி
/
மாநில ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற மாணவி
ADDED : ஜன 30, 2024 12:22 AM

பரமக்குடி, -பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை இணைந்து மாநில அளவிலான ஜூடோ போட்டிகளை, பெரம்பலுார் மாவட்டம் ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடத்தினர். இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளி மாணவி யுவஸ்ரீபிரபா 17 வயதிற்கு உட்பட்ட, 63கிலோ எடை பிரிவில் பங்கேற்றார்.
இவர் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். சாதித்த மாணவியை கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சாதிக்அலி, தலைமை ஆசிரியர் அஜ்மல்கான், உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான், ஆசிரியர்கள், நிர்வாகிகள் பாராட்டினர்.