/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நென்மேனியில் வீணாகிய பள்ளி; தொகுப்பாய்வு பயிற்சிப் பொருட்கள்
/
நென்மேனியில் வீணாகிய பள்ளி; தொகுப்பாய்வு பயிற்சிப் பொருட்கள்
நென்மேனியில் வீணாகிய பள்ளி; தொகுப்பாய்வு பயிற்சிப் பொருட்கள்
நென்மேனியில் வீணாகிய பள்ளி; தொகுப்பாய்வு பயிற்சிப் பொருட்கள்
ADDED : மார் 18, 2024 06:36 AM

பரமக்குடி : பரமக்குடி அருகே நென்மேனியில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையக் கட்டடம் சேதமடைந்த நிலையில் பயிற்சிப் பொருட்கள் அனைத்தும் வீணாகியுள்ளன.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நென்மேனியில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு கருத்தாளர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மாணவர்களின் வகுப்பு அறைகளாகவும் பயன்படுத்தினர்.
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு அருகில் உள்ள கருத்தாய்வு மையம் பராமரிப்பு இன்றியுள்ளது.
இங்குள்ள டி.வி., அறிவியல், கணிதம், கலைப்பிரிவு உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் குப்பை படிந்து வீணாகி உள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் எந்த பயனின்றி உள்ளது.
எனவே கட்டடம், செய்முறை பொருட்கள் வீணாவதை தடுக்க மாவட்டநிர்வாகம், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.