UPDATED : அக் 08, 2026 07:58 PM
ADDED : அக் 08, 2026 07:53 PM
சிக்கல்: சிக்கல் அஞ்சலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆதார் சேவை மையம் செயல்படாமல் உள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர்.
சிக்கல் அஞ்சலக ஆதார் சேவை மையத்தில் 30 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர். சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் பதிவு, ஆதார் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்காக இம்மையத்தை நம்பியுள்ளனர்.
கம்ப்யூட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் இன்றி முடங்கியுள்ளது. இதனால் ஆதார் சேவையை பெற வரும் மக்களும், மாணவர்களும் பலமுறை அலைக்கழிப்பை சந்திக்கின்றனர். இது குறித்து அஞ்சலக அலுவலர்களிடம் கேட்டால் முறையான விளக்கம் தராமல் மெத்தன போக்காக இருந்து வருகின்றனர். பொதுமக்கள் கூறியதாவது :
சிக்கல் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி முறையாக கம்ப்யூட்டரை பழுது நீக்கம் செய்து ஆதார் சேவை மையம் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் மனு அளித்துள்ளோம் என்றனர்.
