UPDATED : அக் 16, 2026 07:50 PM
ADDED : அக் 16, 2026 07:46 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரையில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் புதிய ஆதார் சேவை மையம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.
இங்கு புதிய ஆதார் பதிவு, ஆதாரில் உள்ள தனி நபர் விவரங்களைப் புதுப்பித்தல், புகைப்படம், கைரேகை, கருவிழிப் பதிவு உள்ளிட்ட உயிர்வழித் தகவல்களைப் புதுப்பித்தல் மற்றும் ஆதார் விவரங்களில் பிழை திருத்தம் செய்தல் போன்ற சேவைகளைப் பொதுமக்கள் பெறலாம். கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீ நிகம், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.––––
