/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆதார் சிறப்பு முகாம் நீட்டிப்பு
/
ஆதார் சிறப்பு முகாம் நீட்டிப்பு
ADDED : ஜன 24, 2026 06:38 AM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பகுதியில் அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நேற்று நடந்த நிலையில் இன்றும்(ஜன.,24) நடக்க இருக்கிறது.
அஞ்சல் துறை சார்பில் பரமக்குடி தலைமை அஞ்சலகம், எமனேஸ்வரம் துணை அஞ்சலகம் உள்ளிட்ட இடங்களில் ஆதார் முகாம் நடக்கிறது. இங்கு 25 முதல் 50 பேர் வரை மட்டுமே ஆதார் திருத்தம் செய்ய முடிகிறது. பொதுமக்களின் வசதி கருதி இரண்டு நாட்கள் எமனேஸ்வரம் நேருஜி மைதானம் அருகில் உள்ள எஸ்.என்.வி., திருமண மஹாலில் சிறப்பு முகாம் நடக்கிறது.
ஆகவே புதிதாக ஆதார் அட்டை எடுப்பவர்கள் இலவசமாகவும் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் தன்மைக்கு ஏற்ப 75 மற்றும் 125 ரூபாய் செலுத்தி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்தார்.

