ADDED : ஆக 09, 2025 03:20 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகையில் உள்ள புத்தாள கண்மாய் கரையோரத்தில் உள்ள சிவகாளி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் சிவகாளி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்களுக்கு தாம்பூலம் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூஜகர் முருகன் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* ரெகுநாதபுரம் முத்து நாச்சி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள மஞ்சமாதாவிற்கு ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலைக்கு தாம்பூல பிரசாதம் நைவேத்தியம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டது. ஏராளமான பெண்களுக்கு தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சாயல்குடி பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சுமங்கலி பூஜை கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயணசுவாமி, பத்ரகாளியம்மன் கோயிலில் 504 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. முன்னதாக மூலவர் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பச்சை விரலி மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டும், மகாலட்சுமி அலங்காரமும் நடந்தது.
சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குங்கும அர்ச்சனை, நாமாவளி, பஜனை, லட்சுமி ஸ்தோத்திரம் உள்ளிட்டவைகளை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம், தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.
பவுர்ணமி பூஜை திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனுக்கு நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.