ADDED : ஆக 09, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா சிறப்பு யாகசாலை பூஜை, கணபதி ஹோமம்,கோமாதா பூஜை, பூரணாஹுதி தீபாராதனையுட துவங்கியது.
கரியமல்லம்மாள் உருவம் பதித்த கொடியை கிராமமக்கள் முக்கிய விதியில் ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு வந்தனர்.
மூலவரான கரியமல்லம்மாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம் நடந்தது. பின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அம்மனுக்கும், பக்தர் களுக்கும் காப்பு கட்டப்பட்டது. கமுதி சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.
ஆக.,14ல் விளக்கு பூஜை, 15ல் பொங்கல் வைத்தல், 16ல் அக்னிசட்டி, பால்குடம், சேத்தாண்டி வேடம் ஊர்வலம், முளைப்பாரி கரைத்தல் நடைபெறும்.
ஏற்பாடுகளை பாம்புல் நாயக்கன்பட்டி கிராம மக்கள் செய்துள்ளனர்.

