ADDED : ஆக 07, 2025 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் முளைப்பாரி விழா கடந்த வாரம் காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. கோயில் முன்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாரியம்மனுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி தூக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் கரைத்தனர்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர்.