/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஆடி பவுர்ணமி வழிபாடு
/
பரமக்குடியில் ஆடி பவுர்ணமி வழிபாடு
ADDED : ஆக 09, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி புதுநகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் ஆடி பவுர்ணமி சந்தன காப்பு உற்ஸவம் நடந்தது.
ஆக.,3ல் ஆடி பெருக்கு விழா நடந்தது. ஆக.,8ல் ஆடி பவுர்ணமி தினத்தன்று காலை 9:30 மணிக்கு தியாக வேள்விகள் துவங்கி வருடாபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை மங்கள விநாயகர் கோயிலில் இருந்து சந்தனக்குடம், பன்னீர், தீர்த்த குடம் புறப்பாடாகியது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிறைவடைந்து படி பூஜை நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது.

