sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆடிப்பெருக்கு விழா

/

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு விழா


ADDED : ஆக 05, 2025 04:33 AM

Google News

ADDED : ஆக 05, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடியில் உள்ள கோயில்கள் மற்றும் வைகை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு ஆடிப்பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பரமக்குடி பதினெட்டாம்படி வேம்படி கருப்பணசாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை ஹோமங்கள், அபிஷேகம் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு கருப்பண்ணசாமி சந்தன காப்பு ராஜாங்க சேவையில் அருள்பாலித்தார்.

* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த காக்கா தோப்பு சுந்தரராஜ பெருமாள் கோயில் சன்னதியில் பதினெட்டாம்படி கருப்பணசாமி அருள்பாலிக்கிறார். இங்கு மாலை 6:00 மணி துவங்கி பால்,

சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் சந்தனகாப்பில் அருள் பாலித்த கருப்பண்ணசாமி சன்னதி பதினெட்டு படியில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் பிரசாதங்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

*பரமக்குடி வைகை ஆறு சுந்தரராஜ பெருமாள் கோயில் படித்துறையில் நதியை கொண்டாடும் வகையில் ஏராளமான பெண்கள், ஆண்கள் வழிபாடு நடத்தினர்.






      Dinamalar
      Follow us