/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காணும் பொங்கல் விழாவில் திருவள்ளுவருக்கு அபிஷேகம்
/
காணும் பொங்கல் விழாவில் திருவள்ளுவருக்கு அபிஷேகம்
ADDED : ஜன 17, 2025 05:11 AM

ராமநாதபுரம்: காணும் பொங்கலை முன்னிட்டு நயினார்கோவில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சி வயலுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம், சிலம்பொலி கிராமிய கலைகுழு மற்றும் திருவள்ளுவர் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி, கலைபண்பாட்டுத் துறை பகுதிநேர நாட்டுப்புற கலைப் பபயிற்சி மாணவர்களால் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மரக்காலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சிலம்பாட்ட ஆசிரியர்கள் ரமேஷ், கண்ணன் கலைபண்பாட்டுத் துறை பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன், மாணவர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். கலைபண்பாட்டுத் துறை பகுதிநேர நாட்டுப்புற கலைபயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.