/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
ADDED : செப் 20, 2024 02:37 AM

சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்தவர் மாரிமுத்து,27, இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடலாடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஆனால், மாரிமுத்து வெளிநாட்டில் 4 வருடம் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்.
அதுமட்டுமின்றி அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஒ.சி., எனும் 'லுக் அவுட் சர்குலர்' அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மதியம் 2:50 மணிக்கு ஒமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் பாஸ்போர்ட் விபரங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். அந்த விமானத்தில் மாரிமுத்துவும் வந்திருந்தார். அவரது அரசு அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை பரிசோதனை செய்த போது இவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அவரை பிடித்து சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் குற்றவாளியை ஒப்படைத்தனர்.