/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
/
மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது
ADDED : ஜன 19, 2024 04:38 AM

திருவாடானை: மூதாட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவாடானை அருகே கரையக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் நீலாவதி 84. இவருடைய வீடு கிராமத்தை விட்டு ஒதுக்குப்புறத்தில் இருந்தது.
அதே கிராமத்தை சேர்ந்த பாண்டி 40, கடந்த 2017 ம் ஆண்டு நீலாவதி துாங்கிக் கொண்டிருந்த போது வீடு புகுந்து அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து இரண்டு பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். திருவாடானை போலீசார் பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஜாமினில் சென்ற பாண்டி இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமால் தலைமறைவாக இருந்தார்.
பாண்டியை கைது செய்து ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திருவாடானை போலீசார்நேற்று பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

