/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
/
ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ரூ.16 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : ஜன 05, 2025 06:26 AM

ராமநாதபுரம் : -நிலம் வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கலவசாது வடக்குத் தெருவை சேர்ந்தவர் சாதிக் முஸ்தாபா மனைவி முத்துக்குத்தல் பிர்தவுசியா 54. இவரிடம் முதுகுளத்துார் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருபாகரன் தனது தந்தைக்கு சொந்தமான சத்திரக்குடி பகுதியில் உள்ள 92 சென்ட் நிலத்தை ரூ.32 லட்சத்திற்கு விற்பனை செய்து தருவதாக தெரிவித்தார்.
இந்த நிலத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி முன் பணமாக ரூ.2 லட்சம் பிர்தவுசியாவிடம் கொடுத்துள்ளார்.
இதனை நம்பிய பிர்தவுசியா கழுகூரணியில் உள்ள இடம், கீழக்கரையில் உள்ள இடங்களையும், இவரது மகள் பவுசுல் அஸ்மியா, மருமகன் செய்யது இப்பராஹிம் சேர்ந்து அவர்களது வீடு என அனைத்தையும் முதுகுளத்துார் வாகைக்குளம் பகுதியை சேர்ந்த நல்லேந்திரனுக்கு ரூ.16 லட்சத்திற்கு எழுதி கொடுத்துள்ளனர்.
அவர் இந்த நிலங்களை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தார். இதனை அறிந்த பிர்தவுசியாக அட்வான்சாக கொடுத்த 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு நான் எழுதிக்கொடுத்த சொத்தை திரும்பவும் தனக்கு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை மோசடி செய்ததாக ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார்.
2024 மே 18ல் மோசடியில் ஈடுபட்ட நல்லேந்திரன், கிருபாகரன், உதயக்குமார் மீது வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.
ஏழு மாதமாக தலைமறைவாக இருந்த நல்லேந்திரனை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் போலீசார் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

