/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் தலைமறைவான மீனவர் கைது
/
ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் தலைமறைவான மீனவர் கைது
ADDED : மே 12, 2025 11:33 PM

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடலில் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக வீட்டில் ஜெலட்டின், டெட்டனேட்டர் பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை 39, போலீசார் கைது செய்தனர்.
தொண்டி அருகே புதுக்குடியில் வீடுகளில் ஜெலட்டின் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் 2024 டிசம்பரில் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், போலீசார் வீடுகளில் சோதனை செய்தனர்.
ஒரு வீட்டில் சாக்கு மூடையில் 130 ஜெலட்டின் குச்சிகள், 200 டெட்டனேட்டர்கள், 6 மீட்டர் ஒயர் இருந்தன. அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 42, என்ற மீனவரை கைது செய்தனர்.
தப்பி ஓடிய செந்தில்குமார் 39, அவரது மனைவி காளீஸ்வரி, மீனவர் அப்பாஸ் ஆகிய மூவரை தேடி வந்தனர். அப்பாஸ் ஏற்கனவே கைதானார்.
காளிஸ்வரி முன்ஜாமின் பெற்றார். புதுக்கோட்டை மாவட்டம் இச்சகுடி கிராமத்தில் தங்கியிருந்த செந்தில்குமாரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.