தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தலைமறைவு வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

 தலைமறைவு வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

 தலைமறைவு வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்


ADDED : ஜூலை 15, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த நபர், பட்டா மாற்றத்திற்காக முதலுார் கிராம வி.ஏ.ஓ., முத்துக்குமாரை 37, அணுகினார். இதற்கு முத்துக்குமார் ரூ.5000 லஞ்சம் கேட்டார். பின்னர் ரூ.3000 பெற ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ராமநாத புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.

போலீசார் அறிவுரையின் பேரில் வி.ஏ.ஓ., கூறியதுபோல் சத்திரக்குடியில் உள்ள இ--சேவை மைய ஊழியரிடம் ரூ.3000 வழங்கிப்பட்டது. அப்போது அங்கிருந்த முத்துக்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றிவளைப்பதை அறிந்து தப்பினார். தலைமறைவான முத்துக்குமாரை போலீசார் தேடும் நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us