/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து
/
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : நவ 28, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார்- பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே உள்ள அம்மையப்பர் மில்லில் முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் பணிபுரிகின்றனர். நேற்று பணி முடிந்து வேனில் முதுகுளத்துார் -கமுதி ரோட்டில் சித்திரகுடி கிராமத்தில் பணியாளரை இறக்கி விடுவதற்காக சென்றனர்.
அப்போது வளைவில் பள்ளம் இருப்பது தெரியாத நிலையில் வேன் கவிழ்ந்து விபத்திற்குஉள்ளானது. இதில் பயணம் செய்த ஒரு சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. பொதுமக்கள் உதவியுடன் பணியாளர்களை மீட்டனர். முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் சிலர் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின் மாற்று வேனில் பணியாளர்கள் அனுப்பப்பட்டனர்.