/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரைச் சாலையில் வளரும் முட்செடிகளால் விபத்து
/
கிழக்கு கடற்கரைச் சாலையில் வளரும் முட்செடிகளால் விபத்து
கிழக்கு கடற்கரைச் சாலையில் வளரும் முட்செடிகளால் விபத்து
கிழக்கு கடற்கரைச் சாலையில் வளரும் முட்செடிகளால் விபத்து
ADDED : டிச 02, 2024 04:57 AM

கீழக்கரை : ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை 18 கி.மீ., தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையின் பிரதான பகுதியாக விளங்கும் இச்சாலையின் வழியாக துாத்துக்குடி, திருச்செந்துார், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கான பிரதான வழித்தடம் ஆகும்.
கடந்த 2010ல் துாத்துக்குடி முதல் சாயல்குடி வழியாக கீழக்கரை, ராமநாதபுரம், தேவிபட்டினம், கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடக்கிறது.
கடந்த 6 மாதங்களில் 60 விபத்துக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்துள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து 2020க்கு பிறகு அவ்விடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டும் வரத்து பாலங்களும் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் எவ்வித பராமரிப்பும் இல்லாததால் குறிப்பிட்ட குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மரங்கள் வளர்ந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.