அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : செப் 14, 2026 03:11 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை:
கீழக்கரையில் வாகனபோக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிகளவில் பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது.
கீழக்கரை கிழக்கு கடற்சாலை வழியாக சாயல்குடி, துாத்துக்குடி, கன்னியாகுமாரி, திருச்செந்துார், ராமேஸ்வரம், நாகபட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு 24 மணிநேரமும் வாகனங்களில் செல்கின்றனர். இந்தநிலையில் எதிரே வரும் வாகனங்களை மறைக்கும் வகையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தால் விபத்து அபாயம் உள்ளது. இவற்றை கண்காணித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
–––
