/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூடலுார் ரோட்டில் விபத்து அபாயம்
/
கூடலுார் ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : அக் 31, 2024 01:22 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணி விலக்கு ரோட்டில் இருந்து காவனக்கோட்டை வழியாக கூடலுார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டில் கொக்கூரணி, காவனக்கோட்டை, கவ்வூர், சனவேலி, கூடலுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமத்தினர் பயனடைகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்லும் பிரதான முக்கியத்துவம் வாய்ந்த ரோடாகவும் விளங்குகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவ்வழியாக டூவீலரில் செல்பவர்கள் உடலில் முட்கள் குத்தி பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் எதிர் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோரத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.