/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி விபத்து
/
நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி விபத்து
ADDED : ஆக 28, 2025 06:22 AM
ராமநாதபுரம் : கிழக்குகடற்கரை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் ஒருவர் பலியனார்
துாத்துக்குடி மாவட்டம் வசவப்புரத்தை சேர்ந்த டிரைவர் ரவிசுந்தர் நேற்று அதிகாலை மதுரை--ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிறிய பாலத்தின் மேல் தனது லாரியை நிறுத்திருந்தார். அந்த வழியாக ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டையை சேர்ந்த சேகரன் 59, அதிகாலை 5:30 மணிக்கு டூவீலரில் வேலைக்கு செல்லும்போது சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் காயமடைந்து மயங்கினார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர் கேணிக்கரை போலீசார் லாரி டிரைவர் ரவிசுந்தரை தேடுகின்றனர்.

