/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொம்பூதி செல்லும் ரோட்டில் ஓடையில் தூம்பு பாலம் சேதம்; தொடரும் விபத்துக்கள்

ADDED : மார் 15, 2024 11:43 PM
கடலாடி : கடலாடி அருகே கொம்பூதி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட துாம்பு பாலம் சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் நடக்கிறது.
கடலாடியில் இருந்து கோவிலாங்குளம் ரோடு செல்வதற்கு மங்களம் கிராமத்தின் வழியாக கொம்பூதி கிராமத்திற்கான வழித்தடம் செல்கிறது. 70 மீ., நீளத்தில் ஓடையின் குறுக்காக பெரிய துாம்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அது சரியான முறையில் சமமாக செம்மைப்படுத்தாமல் அதன் மீது தார்ரோடு போடப்பட்டுள்ளதால் துாம்பின் இடைவெளியில் அமைக்கப்பட்ட தார் ரோடால் மேடு பள்ளம் ஆகியுள்ளது.
கடலாடி வில்வ சக்திநாதன் கூறியதாவது: கொம்பூதி - மங்களம் இடையே பெரிய பாலத்தில் இருந்து இரண்டாவது ஓடையில் துாம்புகள் சரியாக பதிக்கப்படாததால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஜிக்ஜாக் எனப்படும் மேடு பள்ளம் உருவாகியுள்ளது.
2 மாதங்களில் 5 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர். துாம்பு பாலத்தினை முறையாக சமன் செய்து குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.