/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குவிந்த மனுக்கள்: நலத்திட்டத் உதவி வழங்கல்

ADDED : செப் 24, 2024 04:35 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில்352 மனுக்கள் பெறப்பட்டன. நாட்டுப்புற கலைஞர்கள்,மாணவர்களுக்கு நலத்திட்டத் உதவிகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலைவகித்தார். பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கை, புகார்கள் அடங்கிய 352 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சார்பில்14பேருக்கு ரூ.96 ஆயிரத்தில் கல்வி, திருமணம் நிதியுதவி, தாட்கோ சார்பில் 3 மாணவர்களுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகைக்கான காசோலை, துாய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணைகள், பரமக்குடி தாலுகா கலையூர் கிராமத்தில் ரூ.1 கோடியே 55 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை மகளிர் குழுபராமரிப்பதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.