ADDED : ஏப் 03, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாயுமானவர் சுவாமி தபோவனத்தில் ஆச்சார்யா சங்கமம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. தபோவன நிர்வாகி ருத்ரானந்த மகாராஜ் சுவாமி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொறுப்பாளர்களான ஸ்ரீசேஷாத்ரி, மாதவன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரதநாட்டியம், சிலம்பம், வேலுநாச்சியார் நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சம்பாக் சமிதி உறுப்பினர்கள், காரியகர்த்தர்கள், ஆச்சாரியாக்கள் பங்கேற்றனர்.----
