/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பயன்படுத்தி வியாபாரம் செய்வோர் மீது நடவடிக்கை அவசியம்

ADDED : ஆக 17, 2025 12:24 AM
ஆர்.எஸ்.மங்கலம்: அதிக சத்தத்தை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி காய்கறிகள், பல சரக்குகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மையப்பகுதியாக திகழ்கிறது. இதனால் பல்வேறு தேவைகளுக்கும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் டவுன் பகுதி மட்டுமின்றி தெருக்களிலும் நேரடியாக காய்கறிகள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாகனங்களில் வைத்து விற்பனை செய்யும் வியா பாரிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதி கரித்து வருகின்றன.
இந்நிலையில், வாகனங்களில் வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள் வாகனத்தில் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஒலிபெருக்கி சத்தத்தை பயன்படுத்துவதால், குடியிருப்பு பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமம் அடைகின்றனர்.
மேலும் வர்த்தக நிறு வனங்களில் வர்த்தகர்களும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே குறிப்பிட்ட அளவு சத்தத்திற்கு மேல் ஒலி எழுப்பி வியாபாரம் மேற்கொள்ளும், வியா பாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.