/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சிறுவர் பூங்காக்களை பராமரிக்க நடவடிக்கை தேவை; கோடை விடுமுறையை கொண்டாட ஏதுவாக

ADDED : மார் 21, 2025 06:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் 'டி' பிளாக்கில் உள்ள அம்மா பூங்கா, நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள சிறுவர் பூங்காக்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கோடை விடுமுறைக்கு முன்னதாக விளையாட்டு சாதனங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் 'டி' பிளாக் பகுதியில் அம்மா பூங்கா 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ரூ.பல லட்சம் செலவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ராட்டினம், ஊஞ்சல்கள், விலங்குகளின் பொம்மைகள் உள்ளன.
இதுபோக தனியாக உடற்பயிற்சி கூடம் உள்ளது. தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி செய்கின்றனர். இந்நிலையில் பூங்கா வளாகம் பராமரிக்கப்படாமல் விளையாட்டு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் முள் செடிகள், புதர் மண்டியுள்ளது.
இதே நிலையில் தான் ராமநாதபுரம் நகாரட்சி புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் அம்மா உணவகம் அருகேயுள்ள சிறுவர் பூங்கா பயன்பாடில்லாமல் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதே போல் நகர், புறநகர் பகுதிகளில் ஊராட்சி, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் பல தொடர் பராமரிப்பின்றி உள்ளன.
இனி வரும் ஏப்., மே மாதங்களில் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் அதிகளவில் மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்வார்கள். எனவே அம்மா பூங்கா உட்பட நகர், புறநகர் பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி பராமரிப்பில் உள்ள பொழுது போக்கும் சிறுவர் பூங்காக்களை பராமரிக்கவும், கூடுதல் பொழுது போக்கு அம்சங்கள் ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.