/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
' மீனவர்கள் குடிசையை அப்புறப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
/
' மீனவர்கள் குடிசையை அப்புறப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
' மீனவர்கள் குடிசையை அப்புறப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
' மீனவர்கள் குடிசையை அப்புறப்படுத்த முயன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'
ADDED : ஜூலை 23, 2025 10:09 PM
ராமநாதபுரம்; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடற்கரை யில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் படகுகளை நிறுத்தியும் குடிசை அமைத்தும் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களது குடிசையை அகற்ற முயன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங்காலோனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: களிமண்குண்டு கடற்கரையில் நான்கு ஊராட்சிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகுகளை நிறுத்தி யும், குடிசை அமைத்தும் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதே பகுதியை சேர்ந்த சிலர் கடற்கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து உள்ளனர்.
அச்சமடைந்த மீன வர்கள் நீதிமன்றம் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளனர். இந் நிலையில் ஆக்கிரமிப் பாளர்களின் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அதிகாரிகள் மீனவர்களின் குடிசைகளை அப்புறப் படுத்த முயன்றுள்ளனர்.
பாராம்பரியமாக மீன் பிடி தொழில் செய்பவர்கள் அமைக்கும் குடிசை ஆக்கிரமிப்பில் வராது என்பது அதிகாரிகளுக்கு புரியவில்லை. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததின் பேரில் மீனவர்கள் குடிசையை அப்புறப்படுத்த கூடாது என தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மக் களிடம் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, கடல் தொழி லாளர் சங்க மாவட்டத்தலைவர் கணேசன், பொருளாளர் முருகவேல், மாவட்ட துணைத்தலைவர் முத்துவேல், பஞ்சவர்ணம் ஆகியோர் குழுவாக கிராமத்தில் விபரங்களை கேட்டு அறிந்தோம்.
கலெக்டர் மீனவர் களின் குடிசைகளை அப்புறப்படுத்த கூடாது, என தெரிவித்த உத்தரவை உறுதியாக அமல்படுத்த வேண்டும். ஒருதலை பட்சமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்து உள்ளனர்.