sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் தேவை கூடுதல் கவச உடை: சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை பலப்படுத்தலாம்

/

பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் தேவை கூடுதல் கவச உடை: சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை பலப்படுத்தலாம்

பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் தேவை கூடுதல் கவச உடை: சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை பலப்படுத்தலாம்

பிச்சைமூப்பன் வலசை சுற்றுலா மையத்தில் தேவை கூடுதல் கவச உடை: சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பை பலப்படுத்தலாம்


ADDED : ஜன 20, 2025 07:28 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசை சூழலியல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதலாக பாதுகாப்பு கவச உடை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பிச்சை மூப்பன் வலசையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் 2020 முதல் சூழலியல் சுற்றுலா தளம் இயங்கி வருகிறது. மன்னார் வளைகுடா பிச்சைமூப்பன் வலசை கடலில் அரிய வகை பவளப்பாறைகளான மான் கொம்பு, மனித மூளை, டேபிள் வடிவம், விரல் வடிவம், ரோஜா இதழ் உள்ளிட்ட பத்து வகையான பவளப்பாறைகளின் வாழ்விடமாக உள்ளது.

இங்கு 12 பேர் செல்லக்கூடிய பைபர் படகில் கடலில் இருந்து 6 கி.மீ., சுற்றளவுக்கு 50 நிமிடத்தில் அழைத்து செல்கின்றனர். 15 சென்ட் அளவுள்ள மணல் திட்டை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கரை திரும்புகின்றனர். ரூ. 200 கட்டணமாக சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை சேதமடைந்துள்ளதால் அவற்றை அணிவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: பிச்சைமுப்பன் வலசை சூழலியல் சுற்றுலா தளம் அழகிய இயற்கை சார்ந்த விஷயங்களை உள்ளடக்கியதால் ஆர்வமுடன் பார்த்து திரும்புகிறோம். கடலுக்குள் செல்லும் போது ஏற்படக்கூடிய விபத்துகளை தவிர்ப்பதற்காக லைப் ஜாக்கெட் பயன்படுகிறது. இந்நிலையில் அங்கு வழங்கக்கூடிய நீர் பாதுகாப்பு லைப் ஜாக்கெட் சேதமடைந்து அழுக்காக உள்ளதால் அவற்றை அணிவதற்கு தயக்கமாக உள்ளது. எனவே அதிகளவு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு புதிதாக லைப் ஜாக்கெட் ஆடைகளை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு புதிய லைப் ஜாக்கெட் பயணிகளுக்கு வழங்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us