/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் - ராமநாதபுரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
/
முதுகுளத்துார் - ராமநாதபுரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார் - ராமநாதபுரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
முதுகுளத்துார் - ராமநாதபுரத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
ADDED : அக் 05, 2024 03:57 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார், கமுதி, கடலாடி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் பள்ளி, கல்லுாரி செல்வதற்கும், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர். தினமும் பணிக்கு செல்வதற்காக முதுகுளத்துாரில் இருந்து பஸ்சில் செல்கின்றனர்.
காலை 8:10 மணிக்கு அருப்புக்கோட்டையில் இருந்து முதுகுளத்துார் வழியாக ராமேஸ்வரம் மற்றும் காலை 8:55 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து முதுகுளத்துார் வழியாக ராமேஸ்வரம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இரு பஸ்களிலும் ராமநாதபுரம் செல்வதற்காக காத்திருக்கும் அரசு பணியாளர்கள், பொதுமக்கள் படிகளில் தொங்கிய படியும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் ஒரு சிலர் கூடுதல் பணம் செலவு செய்து பரமக்குடி வழியாக சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே காலை நேரத்தில் பொதுமக்களின் நலன் கருதி முதுகுளத்துாரில் இருந்து கூடுதலாக ராமநாதபுரத்திற்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.