/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் தேவை

ADDED : அக் 31, 2025 11:44 PM
கீழக்கரை: கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை மற்றும் கிழக்குத் தெரு, கடற்கரை சாலை வங்கிகள் அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பள்ளி கல்லுாரிகளுக்கு காலை மாலை நேரங்களில் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்கள் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து டூரிஸ்ட் பஸ்களில் வரக் கூடிய யாத்ரீகர்கள் கீழக்கரை நகருக்குள் செல்லும் போது சாலை ஓரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கீழக்கரையை சேர்ந்த தன்னார்வலர் அகமது உசேன் கூறியதாவது: ராமநாதபுரம் நகர் பகுதியில் இருப்பதை போன்று ஒலிபெருக்கி மூலமாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ப நடைமுறையை கீழக்கரை பகுதிக்கு கொண்டு வர வேண்டும். வங்கிகள் அதிகம் உள்ள கிழக்குத் தெரு செல்லும் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாடகை வாகனங்கள் டூவீலர்களை நிறுத்திச் செல்லும் போக்கு தொடர்கிறது.
எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.