/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கையிடம் உள்ள விசைப்படகுகளுக்கு தேவை கூடுதல் நிவாரணம்! ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை

ADDED : நவ 30, 2024 06:52 AM

ராமநாதபுரம்; இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகுகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை குறைவாக உள்ளதால் கூடுதலாக வழங்க அரசு முன்வர வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது:
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு அங்குள்ள கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 107 விசைப்படகுகள், 14 நாட்டு படகுகளுக்கு நிவாரணத் தொகையாக விசைப்படகிற்கு தலா ரூ.6 லட்சம், நாட்டுபடகிற்கு தலா ரூ.2லட்சம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இலங்கை- இந்திய மீனவர் பிரச்னைக்கு மாநில அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்தி எல்லை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். விடுப்பட்ட 30 விசைப்படகுகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
விசைப்படகுகள் ஒவ்வொன்றும் ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி மதிப்புள்ளவை. தற்போது வழங்கும் நிவாரணத்தொகை குறைவாக உள்ளதால் படகு வாங்கி மீண்டும் தொழிலில் ஈடுபடுவது சிரமம். இனிவரும் காலங்களில் விசைப்படகு நிவாரணத்தொகையை அரசு அதிகரிக்க வேண்டும்.
கடலில் காணாமல் போன, இறந்து போனவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தொகையை வழங்க வேண்டும் என்றார். -