ADDED : ஜூலை 28, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா இந்த ஆண்டு ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிநேகவல்லி அம்மன் அமர்ந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தார்கள். தேவஸ்தான செயல்அலுவலர் பாண்டியன், நாட்டார்கள் கலந்து கொண்டனர்.
நாளை அம்பாள் தவசும், மறுநாள் திருக்கல்யாணமும், ஜூலை 31ல் ஊஞ்சல் உற்ஸவம், ஆக.1ல் சுந்தரர் கைலாச காட்சியும் நடக்கிறது.