/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நகராட்சி துாய்மை பணியாளருக்கு நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாம்
/
நகராட்சி துாய்மை பணியாளருக்கு நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாம்
நகராட்சி துாய்மை பணியாளருக்கு நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாம்
நகராட்சி துாய்மை பணியாளருக்கு நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : டிச 08, 2024 06:30 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை, சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
ராமநாதபுரம் நகராட்சியில் கழிவு நீரகற்றும் பணியில் 369 சுகாதார பணியாளர்கள், 176 துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது.
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, எலும்பு முறிவு, பல், நுரையீரல், இதய மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழு சுகாதார பணியாளர்களை பரிசோதனை செய்து உரிய ஆலோசனை, சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதாராணி, நகராட்சித்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன்தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதாபர்வீன், நகர் நல அலுவலர் ரத்தினகுமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.