/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 04:22 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., இளைஞர்பாசறை, மகளிரணி சார்பில், தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம்அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள்மணிகண்டன், அன்வர்ராஜா, மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். போதை பொருள் கடத்தல் விற்பனையில் தொடர்புள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், ராமநாதபுரம் நகரச்செயலாளர் பால்பாண்டி, ராம்கோ சேர்மன் (பொ) தஞ்சிசுரேஷ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்.

