/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : பிப் 10, 2024 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி மரைன் போலீசார் கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழியை கடலில் பாதுகாப்பின் போது எடுத்தனர். மரைன் எஸ்.ஐ., செல்வராஜ் தலைமை வகித்தார்.
சமுதாயத்தில் கொத்தடிமை முறை எந்த தொழிலில் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்போம். கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் மறுவாழ்விற்காக பணியாற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மரைன் நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.