/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கன்னிராஜபுரத்தில் நவ.1ல் உயர் மருத்துவ சேவை முகாம்
/
கன்னிராஜபுரத்தில் நவ.1ல் உயர் மருத்துவ சேவை முகாம்
கன்னிராஜபுரத்தில் நவ.1ல் உயர் மருத்துவ சேவை முகாம்
கன்னிராஜபுரத்தில் நவ.1ல் உயர் மருத்துவ சேவை முகாம்
ADDED : அக் 30, 2025 03:48 AM
ராமநாதபுரம்: கடலாடி தாலுகா கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சத்திரிய நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் ( நவ.,1ல்) காலை 9:00 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற உள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கு தனியார்மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரம் வரையிலும், அரசு மருத்துவமனைகளில் ரூ.4000 வரை செலவாகும்.
இந்த திட்டத்தை பொறுத்த வரை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல்மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளி களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே சான்றிதழ் வழங்கப் படும்.
புதிதாக முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவஅறிக்கைகள் அனைத்தும் 3.0 மூலம் கணினிமயமாக்கப்பட உள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

