/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தடுப்பதற்கு அறிவுரை
/
நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தடுப்பதற்கு அறிவுரை
ADDED : டிச 31, 2024 04:25 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நெற்பயிரில் பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்க வேளாண் அலுவலர்கள் அறிவுரை வழங்கினர். திருவாடானை வேளாண் உதவி இயக்குநர் தினேஸ்வரி கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் 26,600 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது கதிர் பிடித்து வரும் நிலையில் உள்ளது. பகலில் வெப்பநிலை அதிகமாகவும், இரவில் வெப்ப நிலை குறைவாகவும் இருப்பதால் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுகிறது. பி.பி.டி. ஆர்.என்.ஆர்., போன்ற ரகங்கள் குலைநோய் மற்றும் புகையான் பூச்சி தாக்குதல் எளிதில் உள்ளாகும்.
நெற்பயிர் இலை, தண்டு, கணுப் பகுதிகளில் சாம்பல் நிற கண் வடிவ புள்ளிகள் தோன்றும். தீவிர தாக்குதலுக்கு உள்ளான பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும்.
இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா 5 சதவீதம் கரைசல், அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் வயலில் தெளிக்க வேண்டும்.
புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மேலாண்மை தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரை வடித்து பயிர்களுக்கு காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு வேளாண் அலுவலரை அணுகலாம் என்றார்.