/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை கால நோய்களை தவிர்க்க அறிவுரை
/
மழை கால நோய்களை தவிர்க்க அறிவுரை
ADDED : டிச 01, 2025 07:04 AM
திருவாடானை: மழை கால நோய்களில் பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறிய தாவது: திருவாடானை தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை காலங்களில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி உட்பட பலவித நோய்கள் மக்களை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நோய்களிலிருந்து தப்பிக்க வீடுகள், ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் குடிநீரை கொதி நிலை வரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, டயர்கள், பிளாஸ்டிக் பைகளில் மழை நீர் தேங்கி நிற்பதை தடுப்பதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கலாம்.
சுற்றுப்புறங்களில் கழிவு நீர், குப்பை தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல் என்றால் அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும் என்றார்.

