/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு அறிவுரை* பிரதமர் கிசான் ஊக்கத் தொகை பெறுவதற்கு
/
விவசாயிகளுக்கு அறிவுரை* பிரதமர் கிசான் ஊக்கத் தொகை பெறுவதற்கு
விவசாயிகளுக்கு அறிவுரை* பிரதமர் கிசான் ஊக்கத் தொகை பெறுவதற்கு
விவசாயிகளுக்கு அறிவுரை* பிரதமர் கிசான் ஊக்கத் தொகை பெறுவதற்கு
ADDED : செப் 20, 2024 07:08 AM
பிரதமர் கிசான் திட்டத்தில் தங்கள் பெயரில் நிலம் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணைகளில் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இதுவரை 17 தவணைகளில் தொகை வரப் பெற்றுள்ளது.
பிரதமர் கிசான் திட்டத்தில் (இ.கே.ஒய்.சி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஆதார் விபரங்களை சரிபார்க்காமல் உள்ளனர். குறிப்பாக மண்டபம் வட்டாரத்தில் 117 விவசாயிகள் இ.கே.ஒய்.சி., முடிக்காமல் உள்ளனர்.
தற்போது பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் 18-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம்.இ-சேவை மையங்களில் பிரதமர் கிசான் திட்ட இணையதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம்.
அல்லது பிரதமர் கிசான் செயலியை பயன்படுத்தி முக அடையாளம் கொண்டு இ.கே.ஒய்.சி., செய்யலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மைய உதவி வேளாண் அலுவலர்களை அணுகி கட்டணம் இன்றி இ.கே.ஒய்.சி., செய்யலாம். ஏதேனும் ஒரு முறையில் விவசாயிகள் விரைவாக பிரதமர் கிசான் திட்ட வலைதளத்தில் இ.கே.ஒய்.சி., செய்ய வேண்டும்.
இப்பணிகளை செய்தால் மட்டுமே பி.எம்.கிசான் நிதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.