/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் பணியில் கவனம் செலுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை
/
மக்கள் பணியில் கவனம் செலுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை
மக்கள் பணியில் கவனம் செலுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை
மக்கள் பணியில் கவனம் செலுத்த ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை
ADDED : ஜன 24, 2025 04:22 AM
திருவாடானை: மக்கள் பணியில் கவனம் செலுத்தி அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் பேசியதாவது:
இதுநாள் வரை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் ஊராட்சிகள் இருந்தன. அதனால் ஊராட்சி நிர்வாகப் பணிகளை அவர்களே முழுமையாக கவனித்து வந்தனர்.
ஆனால் தற்போது தனி அலுவலர் பொறுப்பில் ஊராட்சிகள் உள்ளதால் அனைத்து பணிகளையும் நாம் தான் கவனிக்க வேண்டும்.
பல்வேறு பிரச்னைகள், தேவைகளுக்காக பொதுமக்கள் ஊராட்சிகளை தேடி வருவார்கள். அவர்களை தவிர்க்காமல் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும். ஊராட்சி வரவு செலவு கணக்குகளை முறையாக பின்பற்றுங்கள். வரி வசூலில் கவனம் செலுத்தி அரசுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயராமன், சசிகுமார், வசுமதி மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

