/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குறுகிய சாலையால் ஏர்வாடி-பிச்சை மூப்பன் வலசை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
/
குறுகிய சாலையால் ஏர்வாடி-பிச்சை மூப்பன் வலசை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
குறுகிய சாலையால் ஏர்வாடி-பிச்சை மூப்பன் வலசை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
குறுகிய சாலையால் ஏர்வாடி-பிச்சை மூப்பன் வலசை வாகனங்கள் செல்வதில் சிக்கல்
ADDED : பிப் 12, 2024 04:38 AM

கீழக்கரை: ஏர்வாடி அருகே பிச்சைமூப்பன் வலசையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் சூழலியல் சுற்றுலா மையம் செயல்படுகிறது. இங்கு செல்வதற்கான ஏர்வாடியில் இருந்து 2 கி.மீ., பாதை குறுகலாக இருப்பதால் ஒதுங்க வழியின்றி எதிர் எதிரில் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த 2019ல் மன்னார் வளைகுடா பிச்சை மூப்பன்வலசை கடற்கரையில் சூழல் சுற்றுலா மையம் துவக்கப்பட்டது. கடற்கரை எதிரில் உள்ள மணல் திட்டுக்கு படகில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் பவளப்பாறைகள், பாசிகள், வண்ண மீன்களை கண்டு ரசிக்கலாம்.
இவற்றை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்காக கீழக்கரை வனச்சரகம் சார்பில் இரண்டு கண்ணாடி இழை படகு போக்குவரத்து உள்ளது.
ஏர்வாடி தர்கா அருகே இருந்து 3 கி.மீ.,ல் உள்ள பிச்சை மூப்பன் வலசை செல்வதற்கு குறுகிய சாலை தான் உள்ளது. நாள்தோறும் வந்து செல்லும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் பஸ்கள் எதிர் எதிரே நின்று கொள்வதால் ஒதுங்குவதற்கு கூட வழியில்லாத நிலையில் அருகே உள்ள வயல் காடுகளிலும் பள்ளங்களிலும் இறங்கும் நிலை உள்ளது. 1 கி.மீ., சாலை சேதமடைந்துள்ளது
சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:
வளர்ந்து வரும் சுற்றுலா பகுதியாக பிச்சைமூப்பன் வலசை உள்ளது.
எனவே சுற்றுலாத்துறையினர், மன்னார் வளைகுடா வனச்சரகத்தினர், ஊராட்சி நிர்வாகம் ஒன்றிணைந்து பொதுமக்களின் நலன் கருதி அகலப்படுத்தி புதிய தார் சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் அப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்றனர்.
----